Sunday, January 17, 2010

தாலி - மூன்று முடிச்சு

மூன்று முடிச்சு தத்துவம்


தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது.
முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும் (Tulsi Devi)
2-ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும் (Sita Devi)
3-ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும். (Maa Yashodha)

ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த சிந்தனையை அவளுக்கு நினைவுப்படுத்த அந்த மூன்று முடிச்சுகள் போடப்படுகின்றன.

ஒரு பெண் மணவாழ்க்கையில் அடியெடித்து வைக்க போகின்ற நேரம் மூன்று பேருடைய சிந்தனைகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.
முதலாவது தாயின் ஆலோசனை. 2-ஆவது பாட்டி போன்ற உறவுள்ள மிகுந்த வயதான பெண்மணியின் ஆலோசனை.3-ஆவது அந்த பெண்ணுக்கு சமவயதுள்ள இன்னோரு பெண்ணின் ஆலோசனை. இத்தகைய மூவர் தரும் ஆலோசனைகள் ஒரு பெண்ணின் மணவாழக்கையை சிறந்து விளங்க உறுதுணையாக அமைகின்றது.

ஒரு பெண்ணுக்கு முதலாதாக தாயின் ஆலோசனையே மிக முக்கியமானது. வாழப்போகிற இடத்தில் த பெண் தனது பண்பாலும், அடக்கத்தாலும் தன் கணவன், மாமன், மாமியார், கணவனின் உடன் பிறந்தவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் எப்படி கவர வேண்டும் என்கிற அடிப்படையான விஷயத்தில் ஒரு தாயின் ஆலோசனை மிக முக்கியமானது.

அடுத்ததாக பாட்டி போன்ற மூத்தோர்களின் ஆலோசனைகள். கணவனிடத்தில் எப்படியெல்லம் அணுகி பழக வேண்டும் என்கின்ற நுணுக்கத்தையும் தங்களது மகிழ்ச்சியான வாழ்நாள் இடையே தனது உடல் நல்த்தையும் தனது கணவனின் உடல் நலத்தையும் எப்படி பேணி பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆறியுரைகளையும் பிள்ளைபேறு காலங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இவர்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள்.

கடைசியாக சகதோழிகளிடமிருந்து அந்தரங்க விசயங்களை வேடிக்கக விளையாட்டாக அறிய முடியும்.

இவ்விதமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆலோசனைகள் பெற்று நிலையான மணவாழ்க்கை சீர்தூக்கி நடத்த இந்த மூன்று முடிச்சுகள் அவளுக்கு நினைவூட்ட சாதனமாக விளங்குகின்றது

No comments: