Thursday, September 27, 2007

குறள்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் - மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
[ ஊக்கமுடைமை 60 : 5 (595)]

Explanation:
With rising flood the rising lotus flower its stem unwinds;
The dignity of men is measured by their minds.

இறைவனின் இணை அடிகளை பாத பத்மம் என்று சொல்லுவார்கள். ஏன்? தாமரை நீரில் மூழ்கவே மூழ்காது; நீரின் அளவுக்கு ஏற்ப அதுவும் உயர்ந்து கொண்டே இருக்கும். "நீர்அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்"; " வெள்ளத்து அனைய மலர் நீட்டம்" என்பன தமிழ்ப் பாடல்கள்.

அது போல் நாம் நம் புண்ணிய பாவக் கணக்குகளைக் கூட்டினாலும் சரி, குறைத்தாலும் சரி! அதற்காக அவன் பாதங்களை மறைத்து வைக்க மாட்டான்; புண்ணியமோ பாவமோ, எதைச் செய்தாலும் நம்மைக் கடைத்தேற்றுவதற்கு ஒரே வழி! எப்போதும் நன்கு தெரியும்படி, அடைக்கலம் புகும்படி, பாதங்களை மட்டுமாவது காட்டிக் கொண்டே இருப்பான்!
பற்றுவதும் பற்றாததும் நம் கையில் தான் இருக்கிறது! பெரும்பாலும் புண்ணியர்கள் பற்றிக் கொள்கிறார்கள்; பாவம் செய்தோர், காட்டினாலும் பற்ற மறுக்கிறார்கள்!

No comments: