Wednesday, September 26, 2007

எங்கிருந்து வந்தாய் பெண்ணே ??

At 7.00 A.M, நான் துயில் எழ, மனதில் கவிதையும் பூத்தது...

எங்கிருந்து வந்தாய் பெண்ணே ??

ஆழ்கடலின் சிப்பிக்குள் முத்தாய் பிறந்தாயா
பொற்கொல்லனின் நெருப்பில் தங்கமாய் ஜொலித்தாயா
தேவர்களின் பாற்கடலில் அமிர்தமாய் வந்தாயா
இமயத்தின் உச்சியில் நதியாய் தோன்றினாயா
சுரங்கத்தின் பள்ளத்தாக்கில் வைரமாய் விளைந்தாயா
முத்து நகரின் பவளபாறைகளில் பவளமாய் மிளிர்ந்தாயா
தாமரையின் இலைகளில் பனித்துளியாய் தவழ்ந்தாயா

நிச்சயம், நீ தேவலோகத்தில் இருந்து தான் வந்திருப்பாய்,தேவதையே, பூமியை சுற்றி பார்க்க வந்தாயா இல்லை .. என்னை உன் உலகிற்கு அழைத்து செல்ல வந்தாயா ??


நிலவு முகம் எப்படி ?
பிரமண் படைக்கும் போது அருகில் சரஸ்வதி இருந்திருப்பாள்
இல்லை ....
அன்னை அவள், நிலவை காட்டி அமுது ஊட்டியிருப்பாள்

இனிய குரல் எப்படி ?
நீ பிறக்கும் போது கண்ணனின் புல்லாங்குழல் இசையை கேட்டாயோ !
இல்லை ...
தேவாஅமிர்தம் பருகினாயோ !

உன்னை பெற்ற அன்னை கொடுத்த வைத்தவள்.... நீ குழந்தையாய் இருக்கும் போது
உன் மழலை குரலை கேட்டவள் அல்லவா .... வணங்குகிறேன் தாயை !

No comments: