Thursday, April 26, 2007

இறைவனை நீ தரிசிக்கும் அழகை பார்க்க ஆசை

தாய் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள், நான் உன்னை இதயத்தில் சுமக்கிறேன் ....
குழந்தை பிறகும் வரை தாய் குழந்தையின் குரலை கேட்க முடியாது முகத்தை பார்க்க முடியாது அது போல நானும் காத்திருக்கிறேன் உன் வருகையை எதிர்பார்த்து

என் மனம் தவிக்கிறது நீ ஒன்பது மணி வரை வேலை செய்யும் பொழுது.... உன் மீது கோபம் வருகிறது
தாமரை மலரை பார்த்தவுடன் அவை அடங்கி விடுகிறது ....கோவிலில் ரோஜாக்களை பார்க்கிறேன், அவர்களை போல் உன்னையும் கோவிலில் திருநீர், குங்குமம் வைத்து உன்னை பார்க்க இறைவனை நீ தரிசிக்கும் அழகை பார்க்க ஆசை

Tuesday, April 24, 2007

தாமரை மலர் ஒன்றே போதும்

உன் முகம், உன் குரல் உன் அன்பு அது கிடைக்கும் போது வரட்டும்... எனக்கு தாமரை மலர் ஒன்றே போதும்.....நீ தூரத்திலே இரு, தாமரை மலரை பார்த்தால் என் மனம் சந்தோசமாடைகிறது, எனக்கு இது போதும்


உன் முகம் தாமரை மலர்
உன் அன்பு அன்னை அருள்
உன் குரல் கோவில் மணி ஓசை

நான் தினம் தாமரை மலர் கொண்டு இறைவனை தரிசிக்கும் போது உன் குரல், அன்பு, முகம் கிடைக்கிறது.... நீ தூரத்திலே இரு

Thursday, April 19, 2007

சிலையே நீ என்னை செதுக்குகிறாயோ

சிலையே நீ என்னை செதுக்குகிறாயோ
என் இதயம் வலிக்கிறது

அம்மா இன்னும் சிறு பிள்ளை போல் விளையாடுகிறாய்.... ஒரு படி ஏறினாள் இரண்டு படி இறங்குகிறேன்.. அவள் குரலை கேட்டாள், நான்கு படி ஏறுவேன்... அவள் தாமரை, நீ தான் அவளிடம் பேச வேண்டும் நீ தானே எல்லா திருவிளையாட்டும் செய்கிறாய்....

See how others are enjoying their bachelor life....But you have shown me all troubles before entering into the life. ... I don't want that enjoyment... But நான் முன்னேற வேண்டும் அவளால், தாமரை போல் என் மனமும் சிறந்து விளங்க வேண்டும் ,அவளிடம் ஆங்கிலம் கற்க வேண்டும, தீபமாய் எரிவதற்கு அவள் என்னையாய் இருக்க வேண்டும்... அவள் தான் எனக்கு சரஸ்வதி

ப்ரோஜெக்ட் பற்றி அவள் இருக்கும் போது மற்றவரிடம் பேச மனம் மறுக்கிறது.... Hey Lotus...I become very possessive.

இன்று மனசு சரியில்லை, சாப்பாடு இல்லை.... சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பால் அம்மா... சுவர் இருந்து உயிர் இல்லை என்றாள் ????

Wednesday, April 18, 2007

பாடம் கற்றேன்

On 6th April
தாமரை மலர் வாங்க மார்க்கட் சென்றேன், கடைக்காரர் பூவை திராசில் நெருதது விட்டு தரையில் கொட்டினார்.... தாம்ரை மலரை கீழே போட்டவுடன் எனக்கு கோவம் வந்தது அவரை திடினேன், இந்த மலர்கள் கோவிலுக்கு என்றேன் ... அதற்கு அவர் .. நானும் சிவ பக்தன் தான் கோபம் கொள்ளாதீர்கள்.. மலர் இறைவன் பாதம் சென்ற பின் தான் அது பிராசாதம் ஆகும் என்றார்.. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்... அதன் பிறகு தாமரை பூக்களை எடுத்துக் கொண்டு துளசி செடி வாங்க மற்றொரு கடைக்கு சென்றேன்... வண்டியை நிறுத்தி தாமரை பூக்களை எடுக்கும் போது, சில மலர்கள் கீழ விழுந்தது, சிவன் எனக்கு அப்பொழுதே பாடம் கற்று கொடுத்து விட்டார்...

நாம் இறைவனுக்கு படைக்கும் சாதம், மலர், இழை தண்ணீர் இறைவனிடம் சென்றடைந்த பின் தான் பிரசாதம் ஆகும்.

Tuesday, April 17, 2007

Tamil New Year

14th April 2007, Today Tamil new year, i went to Thiruvettriyur Amman Temple.
இன்று தான் நான் முதன் முதலாக தேங்காய் பழம் உடைத்து, அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டேன்.. கோவில் பழமையானதாக மிகவும் நன்றாக இருந்தது, அங்கு இருந்த பசு மாடுகள் மிகவும் பிடித்தது... அதற்கு வாழைப் பழம் கொடுத்தேன்.. மனது மிகவும் சந்தோசமாக இருந்தது