Tuesday, December 26, 2006

கவிதைகள் தாமரை பாதத்திற்கு

My kavidhai

உன்னிடம் முதன் முதலில் பேசும் போது கவிதை எலுத தெரியாது என்றேன், ஆனால் இப்பொழுது நீயே என்னை கவிஞனாக்கி விட்டாய்...


தாமரைப் பெண்னே

கண்டேன் தாமரைப் பெண்னே உன்னிடம்
நிலவின் குழுமையை உன் விழிகளிலும்
பாலின் தூய்மையை உன் மனதிலும்
இளம் சிவப்பு தாமரையின் அழகை உன் செவ்விதழ் உதடுகளிலும்
வெண் தாமரையின் மென்மையை உன் பாதங்களிலும்
கார் மேகத்தின் கருமையை உன் கருவிழிகளிலும்
அமேசான் காட்டின் அடர்த்தியை உன் கூந்தலிலும்
குயிலின் இசையை உன் இனிய குரலிலும்

மயிலின் நாட்டியத்தை உன் அன்ன நடையிலும்
துளசி்ச் செடியின் புனிதத்தை உன் நற்குணத்திலும்
கண்டேன் பெண்னே !, இத்தனை அழகையும் கண்ட என் மனது ஏனோ
உன் மனதையும், குரலையும் தான் அதிகம் நேசி்க்கிறது
தாமரைப் பெண்னே.

BECOME POSSESSIVE

கடல் அலைகள் என் தேவதையின் பொற் பாதத்தைதொட்டுச்
சென்ற போது
Mobile Phone என் குயிலின் இனிய குரலை
கேட்டு ரசிக்கும் போது
Hand Bag என் தேவியின் மிருதுவான தோள்களில்
சாய்ந்து உறங்கும் போது
Id-card என் தாமரையின் சங்கு கழுத்தை
அலங்கரிக்கும் போது...

Keyboard என் மல்லிகையின் கை விரல்கள்
தட்டச்சு செய்யும் போது

முப்பெரும் தேவி

Hey Lotus ....
உன் திருப்பெயரில் முப்பெரும் தேவியை காண்கிறேன்
[பார்வதி(ur name) – அன்பின் சொரூபம் அன்னை பார்வதி தேவி
வெண்தாமரை – அறிவின் ஆலயம் சக்தி சரஸ்வதி தேவி
செந்தாமரை – செல்வத்தின் களஞசியம் லஷ்மி தேவி]
உன் திருமுகத்தில் பௌர்ணமி நலவை காண்கிறேன்


ரோஜா பூக்களின் கர்வம்

தேவதை போல் வானில் இருந்து இறங்கி வந்தால் என் தாமரை
அலை கரையை வந்து தொட்டு சென்றது போல் இருந்தது
பகலில் நட்சத்திரம் தோன்றி மறைந்தது
Tidel park பிரகாசம் ஆனது
எல்லா ரோஜா பூக்களின் கர்வமும் அடங்கியது


To peacock, parrot and cuckoo...


என் தாமரையை பத்திரமாக பார்த்துக்கொள்ள
மயிலே நீ அவளுக்கு தோழியாய் இரு
என் தாமரையின் மழலைக் குரலை கேட்க
கிளியே நீ அவள் குரலை பதிவு செய்து கூறு
என் தாமரை இனிதாய் கண் உறங்க
குயிலே நீ தாலாட்டு பாடு

நெல்லை விரைவு வண்டி


என் தேவதையை பார்ப்பதற்காக நெல்லை
விரைவு வண்டியில் முன்பதிவு செய்திருந்தேன்

Hey Lotus உன் திருமுகத்தை காண......
காத்திருநதேன் ரயில் நிலைய வாயிலில்
உன் வருகையை எதிர்பார்த்து....
நாடினேன் GOOGLE தேடு பொரியை உன் பெயரை
ஓவ்வொரு பெட்டியின் பெயர் பட்டியலில் தேட
தேடினேன் ரயில் நிலையம் முழுவதும்
பௌர்ணமி நிலவை காண….
ரயில் புரப்பட்டது, ஏஙகியது கண்கள் உன்னை காணாமல்

Place : Madurai junction Time : early morning

அதிகாலை விடிந்தது, ரயில் அடைந்தது மதுரையை
என் தேவதை குடியிருக்கும் மாநகரம்...
ஆம் அன்னை மீனாட்சி ஆட்சி புரியம் சொர்கம்
மறுபடியும் தேடினேன் தேவதையை பார்ப்பேன் என்ற நம்பிக்கையில்.....

But Train gets green signal to start… and I got red signal “lotus not found”

மீண்டும் ரயில் புரப்பட்டது, ஏஙகியது மனம் உன்னை காணாமல்
வழியில் அழகிய மயிலைப் பார்த்தேன்

Hey peacock, tell her that I want to talk.....At 7.00 a.m Train reaches kovilpatti, From there I got down and took bus to my sweet home (Tuticorin)

i am seeing her after 42 days....

என் மனது உயிர் பெற்றது இன்று

தாமரையை பார்த்தவுடன்...

ஏனோ என் மனம் கர்வம் கொண்டது

மற்ற ரோஜாக்களை பார்த்து சிரிக்கிறது....

என் தாமரை போல் ஆகுமா உங்கள் அழகு

என்று கேட்க தோன்ருகிறுது

பௌர்ணமி நிலவா

நீ என்ன அந்த பௌர்ணமி நிலவா, நான்
உன்னை மாதம் ஒரு முறை தான் பார்க்க முடிகிறது
நான் அந்த நட்சத்திரமாக மாற வேண்டுமா
உன்னை தினமும் பார்ப்பதற்கு

மாலை வேளையில்

தினமும் மாலை வேளையில் வீடு திரும்பும் போது
பூககடையை நோக்கி என் கண்கள் தேடுகிறது தாமரை மலர்களை
என் கண்கள் கூட உன்னை விரும்புகிறது, மனதிற்கு தெரியாமல்
நான் என்ன சொல்வது என் விழியை, நீயே பதில்சொல்

உன்னோட mobile கூட உன் குரலை தினமும் கேட்குது,
என்னோட மனது கேட்க முடியவில்லை
என் மனத்திற்குள் நீ பேசிய குரலை
Tape-Record
போல rewind பண்ணி கேட்கிறேன் தினமும்
உன் நிழலை கூட பார்க்க முடியாத நான்
உன்னை தினமும், புனிதமான lotus ஆக பார்க்கிறேன்
உன் மனது இந்த வெள்ளை தாமரை போன்றதால்
வெள்ளை புறா ஒன்றை தூது அனுப்பினால் தான் நீ பேசுவாயோ
இறைவன் வந்து வரம் கேட்டாள் உன்னிடம் பேச வரம் கேட்பேன்
இது கவிதை அல்ல என்னோட மனதின் எண்ணங்கள் ஏன் எனில்
எனக்கு கவிதை எழுத தெரியாது...

பெண்மை

என்னால் என் மனதில் உள்ளதை மறைக்கமுடியவில்லை தடுமாறுகிறேன்.. நீ மட்டும்
எப்படி எல்லாவற்றையும் மனதிற்குள் பூட்டி வைத்திருக்கிறாய் அதுதான் பெண்மையோ..

கவிதைகள்

உன்னை நினைக்கும் பொழுது கவிதைகள்
மனதில் இருந்து உயிர் பெற்று உதிக்கிறது
உன் சுவாசமே(குயிலின் இசை) அதன் உயிர் மூச்சு
உன் வருகையே(நிலவின் ஒளி) அதன் ஆற்றல்
பல கவிதைகள் தோன்றி மறைந்தன
உன் நிழலை பார்க்காமல், குரலை கேட்காமல்
உன் வருகையை எதிர் நோக்கி ஏங்கி இருக்கும்
எஞ்சிய கவிதைகளையாவது காப்பாற்று
தாமரைப் பெண்ணே

சீதைக்கேற்ற ராமன்

தாமரையே உன்னை
என் காதலியாக பார்ப்பதைவிட
என் மனைவியாக பார்க்கவே ஆசை
ஏனெனில் உனக்கு நான்
சீதைக்கேற்ற ராமனாக இருக்க விரும்புகிறேன்
கிரீஷ்ணணாக அல்ல

நிலவு முகம்

நிலவு முகத்தை பார்த்தவுடன் என் மனம் குளிர்ந்தது..
புன்சிரிப்பை பார்த்தவுடன் என் கோவம் எல்லாம் பறந்தது
உன்னை பாத்தால் அந்த சரஸ்வதி கூட பொறாமை கொள்வாள்
அவ்வழ்வு சாந்தம் உன் திரு முகத்தில்......

ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் மாதிரி இருக்கு
நீ அருகில் இருந்தால் அனுதினம் உன்னை நினைக்க மாட்டேன்..
நீ தூரத்தில் இருப்பதால் தான் உன்னை நினைத்துக் கொண்டே இருக்கிறேன்
Oh God Please அவளை பார்க்கும் படி செய்
அப்பொழுதாவது நான் அவளை நினைக்காமல் இருப்பேன்

நினைவுகள்

நண்டு கரைக்கு வருவதை

கடல் அலைகள் இழுத்து செல்வது போல்

மனது மறக்க நினைத்தாலும்

உன் நினைவுகள் உன்னுடன் இழுக்கிறது

வேண்டும் அன்பே

வேண்டும் அன்பே நீ எனக்கு .....
அம்மு செல்லம், அப்பு செல்லம், குண்டு மல்லி என்று கொஞ்ச வேண்டும்
தேன் கலந்த அமுதை நிலவைக் காட்டி ஊட்ட வேண்டும்
குழந்தை போல் மடியில் வைத்து தாலாட்டு பாட வேண்டும்
நீ தூங்கும் அழகை இமைக்காமல் பார்த்து ரசிக்க வேண்டும்
அதிகாலை எழுந்து தேநீர் போட்டு கொடுக்க வேண்டும்
உன் விழியில் என் முகத்தை தேட வேண்டும்
உன் வாசத்தை என் மூச்சுக் காற்றாக சுவாசிக்க வேண்டும்

என் வாழ்வின் இறுதி வரை நீ வேண்டும் அன்பே ..


பாசம்

தாயின் அன்பை புரிய வைத்தவள் நீ தான்
என் குரலை கேட்டாள் மகிழ்ச்சி அடைகிறாள் அன்னை
என்னவளின் குரலை கேட்டாள் மகிழ்ச்சி அடைகிறேன் நான்
இது தான் பாசம் என்பதோ

பாசம் வற்றாத ஜீவநதி

அது காட்டாரு போன்றது

வெள்ளம் போல் கரை புரண்டு ஓடுகிறது

இறை பக்தியை விட வலிமையானது

அணை கட்ட முயற்சிக்கிறேன் முடியவில்லை

நான் உன்னிடம் பலமுறை பேச அழைத்தேன்

நீ அன்றே பேசியிருந்தால், நாம் இருவரும் சேர்ந்து

கட்டியிருக்கலாம் அணையை இன்று,

காலம் கடந்தது... அது கடலை சென்றடைந்தே தீரும்...

உன்னிடம்

என் உலகம் நீயாக இருக்கும் போது
எங்கு சென்றாலும் என் மனது
உன்னையே தான் சுற்றிவரும்..

தாமரைப் பூவை பார்த்தவுடன்
என் முகம் மலர்வதாக, பூக்காரி சொல்கிறாள்
உன்னைப் பார்த்தவுடன்
என் மனம் மலர்வதை நீ அறிவாயோ

கலங்கரை விளக்கு


வாழ்க்கை எனும் தீவை சென்றடைய, இறைவன்
பலருக்கு படகை கொடுத்து, வழியை காட்ட மறந்தான்
எனக்கு கலங்கரை விளக்கை காண்பித்து, படகை கொடுக்க மறந்தான்
படகை வாங்கியவர்களோ, இனிதாய் இருந்தும் வாழ்க்கை எனும் கரை சேருவதில்லை
விளக்கின் ஒளியை பெற்ற நானோ, கடினமாயினும் வாழ்க்கை எனும் கரை சேருவேன்
அவன் சந்தோசம் அந்தப் படகோடு சென்றது
என் சந்தோசம் அந்தத் தீவிலே ஆரம்பமாகும்

காதலில் இணைந்தவர்கள் வாழ்க்கையில் இணைவதில்லை
காதலில் இணையாத நாம் வாழ்க்கையில் இணைவோம்

என் மனதை படிக்க உனக்கு மட்டுமே அனுமதி

என் கவிதைகள் உனக்கே சொந்தம்
மற்றவர்கள் படிக்க அனுமதி இல்லை
அவை கவிதைகள் அல்ல, என் மனம்
தாமரை படிக்க மட்டுமே அனுமதி

இந்த ஆண்டில்(2007)


முதல் குரல் உன் குயிலிசை
முதல் காட்சி உன் திருமுகம்
இதோ முதல் கவிதை ...

இசையை ரசிக்கிறேன்
நீ பாடகி என்பதால்
இரவில் குளிர்கிறேன்
நீ வெண்ணிலா என்பதால்
பனியில் நனைகிறேன்
நீ மார்கழி என்பதால்
சூரியனை தொழுகிறேன்
நீ தாமரை என்பதால்
தீர்த்தம் அருந்துகிறேன்
நீ துளசி என்பதால்
ஞானம் வளர்க்கிறேன்
நீ கலைவாணி என்பதால்
உன்னை காதலிக்கிறேன்
நீ தேவதை என்பதால்
என்னைக்கூட விரும்புகிறேன்
நீ காதலிப்பதால்


கவிதை எழுத நினைக்கிறேன், ஆனால் மனது இடம் தரவில்லை உன்னை காணாமல் !

சர்க்கரை பொங்கல் போல்
என்றும் இனிமையாக இருப்பாய்
கரும்பு போல்
என்றும் வளமுடன் வாழ்வாய்
காலை கதிரவன் போல்
என்றும் பிரகாசமாய் இருப்பாய்
மஞ்சள் போல்
என்றும் புகழுடன் திகழ்வாய்

பேசிவிடு

உன் திருவாய் மலர்ந்து பேசிவிடு
நீ மலர மரமாய் துணை நிற்கிறேன்
உன் நிலவு முகத்தை காட்டு
நீ உறங்க தாலாட்டு பாடுகிறேன்
உன் இதயத்தை எனக்கு கொடு
நீ குடியிருக்க ஆலயம் கட்டுகிறேன்
உன் மலர் பாதம் அருகே இடம் கொடு
இறுதிவரை உனக்கே பணி செய்து கிடப்பேன்

ஆடுக ஊஞ்சல், அப்பு தூங்கிய அழகு


ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அப்புச் செல்லம் ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்முச் செல்லம் ஆடுகவே

மதுரையில் வாழும் இளவரசி
மனதில் என்றும் நிலைத்திடுவாய்
திருவடி தேடி வரும் எனையே
புன்னகை புரிந்தே அழைத்திடுவாய் (ஆடுக)

எந்தன் அன்னை சரஸ்வதி
உருவதில் நீயும் இருக்கின்றாய்
உள்ளத்தின் கவலைகள் அத்தனையும்
உன்னிடம் வந்தால் போக்குகின்றாய் (ஆடுக)

எங்கள் வீட்டின் தாமரையே
எங்கும் வீசும் உன் மணமே - உன்
தெய்வீக குரலின் மகிமையினால்
மங்கல வாழ்வு மலர்ந்திடுமே (ஆடுக)

அன்பை பொழியும் மழைத்துளியே
இதயத்தை நனைத்திடும் உயிர்த்துளியே - உன்
இதயம் எனும் ஆலயத்தில், பூவாய் மலர
இடம் தருவாய் ! (ஆடுக)

more lines to come......

******அப்பு தூங்கிய அழகு ***************


ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்

அப்புச் செல்லாம் தூங்குகின்றாள் தாலேலோ

அவள் வாய்நிறைய அமிர்தம் உண்டு, புன்னகையை காட்டியபின்

ஓய்வெடுத்து தூங்குகின்றாள் தாலேலோ

ஓய்வெடுத்து தூங்குகின்றாள் தாலேலோ

பார்வதி தேவியரின் கன்னத்திலே கன்னம் வைத்து

அம்முச் செல்லம் தூங்குகின்றாள் தாலேலோ

அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவள் உறங்க

மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

(ஆயர்பாடி)

...............
செல்லாம் அவள் தூங்கிவிட்டாள் காசினியே தூங்கிவிடும்

அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ - அவள்

பொன்னழகைக் காண்பதற்கும், போதைமுத்தம் பெறுவதற்கும்,

குயிலின் இசை கேட்பதற்கும்

கன்னியரே கோபியரே வாரீரோ

(ஆயர்பாடி)

******அப்பு தூங்கிய அழகு ***************

என் கவிதையும் பாடலும் அழகு இல்லை

ஆனால் அதற்கு அர்த்தம் உண்டு, உயிர் உண்டு

ஏன் எனில் அவை என் மனதின் எண்ணங்கள்

கண்ணாடி முகத்தை காட்டுவது போல்

என் கவிதைகள் என் மனதைக் காட்டும்

உன் மனதை யார் காட்டுவார் ??

தற்பொழுது அவளிடம் பேச அனுமதி இல்லை

மலரை தரிசிக்க அனுமதி வழங்கிய நீ
உன்னிடம் பேச அனுமதி கொடு
இதயக் கோவிலில் இடம் தந்த நீ
உன்னை மணமுடிக்க அனுமதி கொடு

தாமரையை தரிசித்த விழிகளுக்கு
ரோஜாக்களை பார்க்க அனுமதி இல்லை
I don't see others, even if i see they are looking like you....nee idhayathil irundhu kondu en pulankalai iyakughiraai
***************************

உன் இதயத்தின் அருகே இருக்கும் போது

ரோஜாவின் இதழில் உன்(தாமரை) முகத்தை தேடுகிறேன்

குயிலின் இசையில் உன் குரலை கேட்கிறேன்

சிற்பியின் சிலையில் உன் உருவத்தை கற்பனை செய்கிறேன்

- என்ன செய்வது

நீ மௌனம் என்னும் வேளிக்குள் இருக்கின்றாயே !

இரு நொடி

ஒரு நொடியில் நிலவு முகத்தை ரசித்தேன்
மறு நொடியில் மலர் பாதத்தை தரிசித்தேன்
குழந்தையின் சிரிப்பை இன்று கண்டேன் :-)

சின்ன சின்ன ஆசை

வைகறை,காலை,நண்பகல், ஏற்பாடு, மாலை,யாமம் எனும் ஆறு பொழுதிலும் உன்னருகே இருக்க ஆசை

வைகறைப் பொழுதில்

தாமரைக்கு தேநீர் போட்டு கொடுக்க ஆசை

மல்லிகையுடன் சேர்ந்து கோலம் போட ஆசை

காலைப் பொழுதில்

தேன் கலந்த அமுதை ஊட்டி விட ஆசை ...

நண்பகல் பொழுதில்அப்புவிடம் பேசிக் கொண்டிருக்க ஆசை

ஏற்பாடு பொழுதில்நிலவு முகத்தை பார்த்துக் கொண்டிருக்க ஆசை

மாலை பொழுதில்

மலர் பாதத்திற்கு மருதானி வைத்து விட ஆசை

இரவு(யாமம்) பொழுதில்

அம்முவை தாலாட்டு பாடி தூங்க வைக்க ஆசை

தூங்கும் அழகை கண்-இமைக்காமல் பார்க்க ஆசை

பெயரின் ஒற்றுமை

என்னை பெற்ற அன்னையின் பெயர் பார்வதி

நான் வணங்கும் தெய்வத்தின் பெயர் பார்வதி

என் துணைவியாகும் தாமரையின் பெயரும் பார்வதி

சிற்பியானேன்

உன்னால் புலவனானேன்

மனதில் கவிதை பூத்தது

உன்னால் பக்தனானேன்

தேவியின் அன்பு கிடைத்தது

உன்னால் சிற்பியானேன்

தாமரையின் சிற்பம்(மனம்) உருவாகியது

No comments: