Wednesday, January 10, 2007

ஆடுக ஊஞ்சல், அப்பு தூங்கிய அழகு


ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அப்புச் செல்லம் ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்முச் செல்லம் ஆடுகவே

மதுரையில் வாழும் இளவரசி
மனதில் என்றும் நிலைத்திடுவாய்
திருவடி தேடி வரும் எனையே
புன்னகை புரிந்தே அழைத்திடுவாய் (ஆடுக)

எந்தன் அன்னை சரஸ்வதி
உருவதில் நீயும் இருக்கின்றாய்
உள்ளத்தின் கவலைகள் அத்தனையும்
உன்னிடம் வந்தால் போக்குகின்றாய் (ஆடுக)

எங்கள் வீட்டின் தாமரையே
எங்கும் வீசும் உன் மணமே - உன்
தெய்வீக குரலின் மகிமையினால்
மங்கல வாழ்வு மலர்ந்திடுமே (ஆடுக)

அன்பை பொழியும் மழைத்துளியே
இதயத்தை நனைத்திடும் உயிர்த்துளியே - உன்
இதயம் எனும் ஆலயத்தில், பூவாய் மலர
இடம் தருவாய் ! (ஆடுக)

more lines to come......

பாடல் கவிதையை விட கடினமாக உள்ளது எழுதுவதற்கு
This song(modified) needs some more tuning...Hey krishna, i have modified your song for lotus :-)

******அப்பு தூங்கிய அழகு ***************

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
அப்புச் செல்லாம் தூங்குகின்றாள் தாலேலோ
அவள் வாய்நிறைய அமிர்தம் உண்டு, புன்னகையை காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றாள் தாலேலோ
ஓய்வெடுத்து தூங்குகின்றாள் தாலேலோ

பார்வதி தேவியரின் கன்னத்திலே கன்னம் வைத்து
அம்முச் செல்லம் முத்தம் தந்தாள் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவள் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

(ஆயர்பாடி)
பாவை அவள் மனம் குளிர்ந்து, புன்சிரிப்பை காட்டியதில்
பிருந்தாவனமே மலர்ந்ததம்மா தாலேலோ - அவள்
பெண்மையின் நாணம் கூட, ஒரு யோகநிலை போல் இருக்கும்
யார் அவளை தூங்க விட்டால் தாலேலோ
யார் அவளை தூங்க விட்டால் தாலேலோ

...............
செல்லம் அவள் தூங்கிவிட்டாள் காற்றினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ - அவள்
பொன்னழகைக் காண்பதற்கும், குயிலின் இசை கேட்பதற்கும்,
போதைமுத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ

(ஆயர்பாடி)
******அப்பு தூங்கிய அழகு ***************

[கவிதை கோர்வையாக இல்லை ! , நீ அருகில் இருந்தால் அவை மெருகேறும்] You review and do corrections :-)

என் கவிதையும் பாடலும் உன் போல் அழகு இல்லை

ஆனால் அதற்கு அர்த்தம் உண்டு, உயிர் உண்டு

ஏன் எனில் அவை என் மனதின் எண்ணங்கள்

கண்ணாடி முகத்தை காட்டுவது போல்

என் கவிதைகள் என் மனதைக் காட்டும்

உன் மனதை யார் காட்டுவார் ??

No comments: