Tuesday, December 26, 2006

முருகரும் விநாயகரும்

********** தேவலோகத்தில் *************
[ தேவிகள் மூவரும் தேவலோகம் வந்தடைந்தனர் ]

முருகர் : அம்மா எங்கு சென்றீர்கள்
பார்வதி : பூமிக்கு சென்று இருந்தோம் மைந்தா
விநாயகர் : எதற்கு அம்மா
பார்வதி : உனக்கு தேவர்கள் சொல்லவில்லையா, நாங்கள் தாமரை பெண்ணை சந்தித்து வருகிறோம்

முருகர் : யார் அந்த பெண் அம்மா
பார்வதி தேவி: அவள் உங்களை போன்று சமத்தானவள், பெயருக்கு ஏற்றார் போல் அழகாகவும், மென்மையாகவும் இருப்பாள். மரத்தின் உச்சியில் உள்ள ஆப்பிள் போன்று உயர்ந்து, சிறந்து விளங்குபவள். நிலவின் குளுமை, தாமரையின் மலர்ச்சி, குழந்தையின் சிரிப்பு, துளசியின் புனிதம் இவை அனைத்தையும் கொண்ட தேவதை அவள்.

விநாயகர்: நாங்கள் சென்று பார்த்து வருகிறோம் அம்மா.
பார்வதி: இல்லை மைந்தா... தற்பொழுது அவள் busy ஆஹ இருப்பாள். நீங்கள் சென்றாள் இடையூராக இருப்பீர்கள்
முருகர் & விநாயகர் : இல்லை அம்மா
பார்வதி: அப்படி என்றாள் ஒருவர் மட்டும் சென்று வாருங்கள்

முருகர் : அண்ணா, நான் சென்று பார்த்து வருகிறேன்...
விநாயகர்: இல்லை இல்லை, நான் தான் மூத்தவன் ஆதலால் நான் முதலில் பார்த்து வருகிறேன் .. நீ நலம் விசாரித்ததாக சொல்கிறேன்...
பார்வதி: ஏன் சண்டை போடுகிறீர்கள், யார் இந்த உலகத்தை முதலில் சுற்றி வருகிறீர்களோ அவர்கள் தாமரைப் பெண்ணை பார்த்து வாருங்கள்

[விநாயகர், முருகர் இருவரும் உலகத்தை சுற்றி வர கிளம்பு கின்றனர்]

முருகர் தனது வாகனமாகிய மயிலை தேடுகிறார்.... அது பூலோகத்தில் இருப்பதை அறிந்து(தாமரைப் பெண்ணிடம் இருப்பதை அறியாமல்) பூமிக்கு செல்கிறார்... விநாயகர் தன்னால் இந்த உடம்பை வைத்துக்கொண்டு உலகத்தை சுற்றி வர முடியாது என்பதை உணர்ந்து, சற்று சிந்திக்கிறார்... தாய் தந்தையரே உலகம் என்பதால் அவர்களை சுற்றினாள் உலகத்தை சுற்றியதற்கு சமமா என்று முனிவர்களிடம் கேட்கிறார்... முனிவர்கள் ஆமாம் என்றவுடன் விநாயகர் தாய் தந்தையறை சுற்றி வந்து தாமரை பெண்ணை பார்க்க கிளம்புகிறார்...

**********************பூமியில் ***************
முருகர்: நீ எப்பொழுது இங்கு வந்தாய்
மயில்: உங்கள் பக்தன் வேண்டுகோலுக்கு இணங்க நீங்கள் தான் என்னை இங்கு அனுப்பி வைத்தீர்கள்..
முருகர்: ஓ... ஆமாம் மறந்து விட்டேன்... சரி வா போகலாம், நாம் தாமரை பெண்ணை பார்க்கச் செல்ல வேண்டும்
மயில்: அவள் இங்கு தான் இருக்கிறாள் முருகா !
முருகர்: அப்படியா மிக்க நன்று ....

[முருகர் மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி விட்டு தாமரையின் அலுவலகம் வந்து சேர்ந்தார்...அதே நேரம் விநாயகரும் அங்கு வந்து சேர்ந்தார்]

******** தாமரையின் அலுவலகம் **********

[தாமரை அழகாக கோடிங் செய்து கொண்டிருந்தாள்... முருகரும் விநாயகரும் அவள் முன் காட்சி கொடுத்தனர்... அவர்கள் தன்னை பார்க்க வந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தாள் தாமரை...]

விநாயகர்: (தாமரை busy ஆக இருப்பதை அறிந்து முருகனிடம் ) தம்பி நான் தாமரையிடம் பேசி விட்டு வருகிறேன்...நீ சற்று நேரம் கழித்து வா !
முருகர்: நான் தான் உலகத்தை சுற்றி விட்டு வந்தேன், என்னை நீ மறுபடியும் ஏமாற்றாதே....

விநாயகர்: இல்லை தாய் தந்தையரை சுற்றி விட்டு, நான் தான் முதலில் வந்தேன்...
தாமரை: (சிரித்த முகத்துடன்)என்ன இங்க வந்தாச்சுல...அப்புறம் என்ன (செல்லமாக திட்டினாள்) தாமரை சொன்னவுடன் இருவரும் சரி என்று கேட்டுக்கொண்டனர்
************ திருவிளையாடல் ***********
முருகர்: என்ன செய்து கொண்டிருக்கிறாய்....
தாமரை:பாத்தா தெரியல program code செய்கிறேன்...
முருகர் : hmm...சரி கொடு நான் செய்கிறேன்
தாமரை: இல்லை உனக்கு எழுத தெரியாது...நீ நான் எழுதிய ப்ரோக்ரம டெஸ்ட் பண்ணு...உனக்கு தான் பக்தர்களை நல்லா சோதிச்சு பழக்கம்' ல !
முருகர்: ஆமாம் பெண்ணே...நீயும் தான் சோதிக்கிறாய்,.. ப்ரோக்ரமா எப்படி டெஸ்ட் செய்து பிழையை நீக்குகிரோமோ அதை போல தான் என் பக்தனின் ஆன்மாவை மேன்மைப் படுத்துகிறேன்...

தாமரை: சரி நான் இப்பொழுது சாப்பிட போகிறேன்...
முருகர்: அப்ப டெஸ்டிங் ?
தாமரை: மதியம் வந்து பார்த்துக்கோ

விநாயகர்: எனக்கு...
தாமரை: என்ன உனக்கு இல்லாமலா... புளியோதரை தான் இருக்கு.. நீங்கள் சாப்பிடுவீர்களா ??...
முருகர்: எங்களுக்கு மிகவும் பிடிக்கும்....

[ தாமரை முருகர், விநாயகர் மூவரும் சேர்ந்து சாப்பிட்டனர்]

தாமரை: நான் இன்று ஊருக்கு செல்கிறேன், ஆதலால் நீங்கள் என் வேலையை பார்த்து கொள்ளுங்கள்
முருகர்: சரி நீ சென்று வா, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
விநாயகர்: அப்பு Happy Vacation !

**** lotus came back to office ****

முருகர்: Welcome lotus !
தாமரை: ஹ்ம்ம்ம்.... என்ன செய்தீர்கள், நான் வரும் வரை
முருகர்: வேலை ஒன்றும் இல்லை, ஆதலால் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம்
விநாயகர்:இல்லை அப்பு, அவன் உன் தோழியிடம் கடலை வருத்துக் கொண்டிருந்தான் :-)
தாமரை: ஓ...அப்படியா விசயம், ஏய் தெய்வானையிடம் சொல்கிறேன் பார்
முருகர்: சொல்லாதே அவளிடம்.... சும்மாதான் பேசிக்கொண்டிருந்தேன் தாமரை: சரி சும்மாதான் சொன்னேன்
முருகர் & விநாயகர்: Happy New Year lotus !!
தாமரை: Thanks and same to you !

[சில நாட்கள் சென்றது... முருகரும், விநாயகரும் விடை பெறுகின்றனர் ]முருகர்: அப்பு இங்கே வா...
தாமரை: ஹ்ம்ம்....என்ன சொல்லு !
முருகர்: உன் பெண்மையை கண்டு வியக்கிறேன் பெண்ணே ! உன் சொற்களால் ஒருவனை கவிஞனாக்கினாய், உன் அன்பால் அவன் புலன்களை இயக்குகிறாய். பக்தனாக்கினாய், பாசம் கற்றுக் கொடுத்தாய்.. நீ அருகில் இல்லாமல், உன்னை பார்க்காமல் அவனுள் எத்தனை மாற்றங்கள் ??... நீங்கள் பேசும் காலம் விரைவில் வந்து விடும், அன்றே அவன் வாழ்க்கையின் தொடக்கம்.

விநாயகர்: அவன் இதயத்தை உன் குரல் தான் சாந்தமாக்கும்... நீ எப்பொழுதும் சந்தோசமாக இருப்பாய், தாமரை மலர் போல் புகழுடன் இருப்பாய்... நாங்கள் வருகிறோம்
தாமரை: சரி நான் பேசுகிறேன்... மயில் ?
முருகர்: அது, அவன் உன்னை மணமுடிக்கும் வரை உனக்கு துணையாக இருக்கும்.
[முருகரும், விநாயகரும் விடை பெற்றனர் ]

No comments: