முனிவர்: முப்பெரும் தேவிகள் எங்கே ?
நாரதர்: பூமியில் அவர்களை போல் ஒரு பெண் இருப்பதை கேள்வி பட்டு பார்க்க சென்றுள்ளனர்
முனிவர்: யார் அந்தப் பெண் எனக்கு தெரியாமல், எப்படி இது சாத்தியம்
நாரதர்: அந்த பெண்ணின் பெயர் தாமரை என்ற அப்பு... நாராயணா!
முனிவர்:ஓ.. நானும் சென்று வருகிறேன்...
நாரதர்: நாராயணா!, முனிவரே தர் சமயம் அவளை பார்க்க இயலாது..
முனிவர்: ஏன் நாரதரே !
நாரதர்: அந்த பெண் தர்சமயம் busy ஆக இருப்பதால் தேவியர்
மூவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது
******* சில நாட்கள் சென்றது *****
முனிவர்: ஏன் தேவியர் மூவரும் இன்னும் வரவில்லை
நாரதர்: அவர்கள் அந்த பெண்ணிற்கு உதவியாக பூமியிலே தங்கி விட்டனர்
முனிவர்: என்ன! அந்த பெண்ணிற்காகவா
நாரதர்:ஆம் முனிவரே...அந்த பெண்ணின் ப்ரோஜெக்ட் production செல்கிறது, அதற்கு உதவியாக சரஸ்வதி,லக்ஷ்மி,பர்வதி தேவிகள் மூவரும் உள்ளனர்
சரஸ்வதி தேவி ப்ரோஜெக்ட் செய்வதற்கு உதவியாகவும், லக்ஷ்மி தேவி அவள் வீடு திரும்பும் போது பாதுகாப்பிற்கு துணை இருப்பாள்
********* சில நிமிடங்களில் *********
இந்திரன்: இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் நாரதரே..
நாரதர்: முனிவரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறேன்
இந்திரன்:அதற்கு இப்பொழுது நேரம் இல்லை... நீங்கள் இருவரும் தேவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு பாற்கடல் வந்து சேருங்கள்
நாரதர் & முனிவர்: ஏன் இந்திரரே !
இந்திரன்: சற்று நேரம் முன்பு பார்வதி தேவியிடம் இருந்து ஓலை ஒன்று வந்தது,
ஓலையில்
[ தேவாஅமிர்தம் தீர்ந்து விட்டது !... நீங்கள் உடனே தேவர்களை அழைத்துக்கொண்டு பாற்கடலில் இருந்து அமிர்தம் எடுத்துக் கொண்டு வாருங்கள் ...]
இப்படிக்கு,
பார்வதி தேவி
முனிவர்: இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான அமிர்தம் இருந்ததே
இந்திரன்: ஆம்...
முனிவர்: பிறகு எப்படி...
இந்திரன்: பூமியில்...தாமரை பெண்ணிற்கு அமிர்தம் மிகவும் பிடிக்குமாம், தேவி அந்த பெண்ணிற்கு அன்னம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள் ...தேன் கலந்த அமிர்தம் வழங்கினாள் தான் நன்றாக சாப்பிடுவாளாம்..
முனிவர்:அப்படியா...அந்த பெண்ணை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம்
******** இடம்: பாற்கடல் ******
நாரதர் : அமிர்தம் எடுப்பதற்கு,தேவர்கள்,அசுரர்கள் வந்து விட்டார்கள் மந்தார மலையும் தயாராக இருக்கிறது, ஆனால் பாற்கடலை கடைவதற்கு வாசுகி பாம்பு இன்னும் வரவில்லை
இந்திரன்: ஏன் நாரதரே...
நாரதர்: வாசுகி பாம்பு பூலோகத்தில் உள்ளது
இந்திரன்: என்ன ??
நாரதர்: ஆம்...பூமியில் மழை பெய்வதால், தாமரை பெண்ணிற்கு குடையாக இருப்பதற்கு தேவி சரஸ்வதி வாசுகி பாம்பை அழைத்துச் சென்றுள்ளார்...
இந்திரன்: ஓ..அப்படியா, தேவிக்கு தகவல் அனுப்பி.. உடனே வாசுகியை வரச் சொல்லுங்கள் நாரதரே...
நாரதர்: இப்பொழுதே ....
************ பூலோகத்தில் **************
தகவல் அறிந்ததும், தேவி சரஸ்வதி மழை பொழிவதை சிறிது காலம் நிறுத்த வருட பகவானுக்கு உததரவிட்டால் !. வருட பகவான் தேவியின் ஆணையை உடனே நிறைவேற்றினார், மழை நின்றது, வாசுகி பாற்கடல் சென்றது......
தேவி பார்வதி (பதில் ஒலையில்): தாமரையின் ப்ரோஜெக்ட் வெற்றிகரமாக 17/11 அன்று prod சென்றது... தாமரை மிகவும் சந்தோசமாக உள்ளார்.. அதனால் தேவர்களுக்கு இனிப்பு வழங்குங்கள் !. சீக்கிரம் அமிர்தம் தயார் செய்து கொண்டு வாருங்கள், அமிர்தத்தின் முதல் துளி தாமரை பெண்ணிற்கு !
******** இடம்: பாற்கடல் ******
தாமரையின் ப்ரோஜெக்ட் prod சென்றத்தை கேள்விப்பட்டதும்....எல்லோரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்... நாரதர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்... அதே உற்சாகத்தில் அமிர்தம் கடய சென்றனர்..
வாசுகி வந்ததும் தேவர்கள், அசுரர்கள் சேர்ந்து மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிராகவும் வைத்து பாற்கடலை கடைகின்றனர் ! அமிர்தம் பால் போல் பொங்குகிறது(தாமரை மலர்வதை போல்)... தேவர்கள்... அமிர்தத்தை கலசத்தில் அடைத்து பூமிக்கு மயிலிடம் கொடுத்து அனுப்பினார்கள்..
************ பூலோகத்தில் **************
அசுரர்கள் அமிர்தத்தை பாதி வழியில் அபகரிக்க முயன்றனர்...ஆனால் அது தாமரை பெண்ணிற்கு என்று தெரிந்ததும் அச்சமுற்று திரும்பிச் சென்றனர்... மயில் (தாமரையின் தோழி) அமிர்தத்தை பத்திரமாக பார்வதி தேவியிடம் கொண்டு வந்து சேர்த்தது...
தாமரை பெண்ணிற்கு மிகுந்த சந்தோசம்...அந்த முக மலர்ச்சியை பார்க்க கோடி கண்கள் வேண்டும்
பார்வதி தேவி தாமரையை(பௌர்ணமி நிலா) மடியில் வைத்து குழந்தை போல் அமிர்தத்தின் முதல் துளியை நிலவைக் காட்டி ஊட்டினாள். இந்த காட்சி, யசோதை கண்ணனுக்கு அன்னம் ஊட்டியது போல் அழகாக இருந்தது, தாமரையின் இருப்பிடம் பிருந்தாவனம் போல் காட்சி அளித்தது
************ இந்திரலோகத்தில்***********
நாரதார்: தேவிகள் மூவர் இல்லாமல் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய பணிகள் சற்று பாதிப்படைந்துள்ளது...
இந்திரன்: ஏன் நாரதரே....
நாரதர்: எல்லாம் அறிந்த நீங்களா கேட்பது, சக்தி இல்லையேல், சிவன் இல்லை... இது உலகம் அறிந்தது
இந்திரன்: ஆம்... யாம் அறிவோம் !
நாரதர்: தேவிக்கு ஓலை எழுதி விட்டேன், நீங்கள் தான் நேரில் சென்று இதை தேவியரிடம் தெரிவிக்க வேண்டும்
இந்திரன்: இதோ இப்பொழுதே பூலோகம் செல்கிறேன்
************ பூலோகத்தில் **************
இந்திரன்: வணக்கம் தேவி !
தேவி சரஸ்வதி: வணக்கம், என்ன விஷயம் இந்திரரே
இந்திரன்: மேலோகத்தில் தாங்கள் மூவர் இல்லாமல் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய பணிகள் சற்று தாமதம் அடைந்துள்ளது...
தேவி பார்வதி: யாம் அறிவோம்
தேவி லக்ஷ்மி: தாமரையின் ப்ரோஜெக்ட் இல் டெஸ்டிங் நடைபெறுவதால் நாங்கள் மூவரும் ஒரு வாரம் கழித்து வருவதாக... மும்மூர்த்திகளிடம் போய்ச் சொல்லுங்கள்..
இந்திரன்: அப்படியே ஆகட்டும்
*********தாமரை அன்னம் சாப்பிட்ட அழகு*******
தேவி பார்வதி தாமரைக்காக வெள்ளிக் கின்னத்தில் சாதம்,பால்,பழம் தேன்,அமிர்தம் இவற்றை நன்றாக பிசைந்து, சாப்பிட ஏதுவாக உருண்டை பிடித்து அன்னம் தயார் செய்தாள்...
பார்வதி: அப்பு இங்கே வா... சாப்பிடலாம்
தாமரை: அம்மா பொறு.. நான் ஒரு package caste செய்து விட்டு வருகிறேன்... பர்வதி: வா மா செல்லம்...உனக்கு பசிக்கும்'ல... அதனை தேவி சரஸ்வதி பார்த்துக்கொள்வாள்
தாமரை: சரி மா.. நான் வருகிறேன்...
[யசோதையின் மடியில் கண்ணன் அமர்ந்ததை போல், அப்பு அன்னை மடியில் அமர்ந்தாள்]
தாமரை: அம்மா நிலா எங்க ?
[அன்று அமாவாசை ஆதலால் நிலவு தோன்றவில்லை பார்வதி தேவி அப்புவிற்காக நிலவை தோன்ற செய்தால் - நிலவுக்கு நிலவை காட்டினாள்]
அன்னை பார்வதி: நிலா வந்துவிட்டது...இப்ப சாப்பிடு.. கண்ணா
[நிலவை பார்த்தவுடன்...தாமரை சமத்தாக சாப்பிட்டாள்]
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா... அப்பு செல்லத்திற்கு
மல்லிகைப் பூ கொண்டு வா !
பாட்டு பாடி நிலவை காண்பித்து, தேவி பார்வதி தாமரையை சாப்பிட வைத்தாள்
******தாமரை அண்னம் சாப்பிட்ட அழகு*****
தாமரை: அம்மா நான் தூங்கணும், நீ ஒரு பாட்டு பாடு ..
சரஸ்வதி வீணை இசைக்க, பார்வதி தேவி பாட்டு பாட...செல்லம் இனிதாய் உறங்கினாள்
******அப்பு தூங்கிய அழகு ***************
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
அப்புச் செல்லாம் தூங்குகின்றாள் தாலேலோ
அவள் வாய்நிறைய அமிர்தம் உண்டு புன்னகையை காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றாள் தாலேலோ ஓய்வெடுத்து தூங்குகின்றாள் தாலேலோ
******அப்பு தூங்கிய அழகு ***************
********* ஒரு வாரம் சென்றது ******
(தேவிகள் தாமரையை விட்டு செல்ல மனம் இல்லாமல், விடை பெறுகின்றனர்)
முப்பெரும் தேவிகள் விடை பெரும் நேரம் வந்தது
தேவி பார்வதி : தாமரையே உன்னிடம் இருந்த நாட்கள் கண்ணன் பிருந்தாவனத்தில் களித்த நாட்கள் போன்று இனிமையாக இருந்தது.... எங்களை அன்பால் திளைக்க வைத்தாய்.. யசோதை பெற்ற மகிழ்ச்சியை அடைந்தோம்.. நாங்கள் விடை பெறுகிறோம் ....
தாமரை: அம்மா இதே அன்பு எனக்கு எப்பவும் வேண்டும்
சரஸ்வதி: நிச்சயம் கிடைக்கும் பெண்ணே
தாமரை: நீங்கள் சென்ற பிறகு..??
லக்ஷ்மி: குழந்தாய் உனக்கு ஏற்ற துணைவன் அமைவான், உன்னை எப்பொழுதும் அன்பாக பார்த்துக் கொள்வான்.
தாமரை: சரி அம்மா.
முப்பெரும் தேவிகள்: எங்கள் அருள் உனக்கு எப்பொழுதும் உண்டு
[தாமரை முகம் மலர தேவிகள் விடை பெற்றனர் ]
No comments:
Post a Comment